ஹதீஸ்கள்
#1113
ஸஹீஹ் அல்-புகாரீ - Shortening the Prayers (At-Taqseer)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்தபடியே தொழு தார்கள். (அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்திருந்த) மக்களில் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உட்காருங்கள்’ என்று மக்களுக் குச் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும், “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுகிறார். எனவே, அவர் ருகூஉ செய்யும்போது நீங்களும் ருகூஉ செய்யுங்கள் அவர் நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள்” என்று கூறினார்கள்.18 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، عن مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها انها قالت صلى رسول الله صلى الله عليه وسلم في بيته وهو شاك، فصلى جالسا وصلى وراءه قوم قياما، فاشار اليهم ان اجلسوا، فلما انصرف قال " انما جعل الامام ليوتم به، فاذا ركع فاركعوا، واذا رفع فارفعوا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Shortening the Prayers (At-Taqseer)
- Hadith Index
- #1113
- Book Index
- 33
Grades
- -
