ஹதீஸ்கள்
#1098
ஸஹீஹ் அல்-புகாரீ - Shortening the Prayers (At-Taqseer)
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் பயணம் செய்யும் போது தமது ஊர்தி ஒட்டகத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். தமது முகம் எத்திசையில் இருக்கிறதென்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்திசை நோக்கிச் சென்றாலும் ஊர்தி ஒட்டகத்தின்மீது அமர்ந்து கூடுதலான தொழுகைகளையும் ‘வித்ர்’ தொழுகையையும் தொழுவார்கள். எனினும், கடமையான தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள் (வாகனத்திலிருந்து இறங்கித்தான் தொழு வார்கள்)” என்றும் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
وقال الليث حدثني يونس، عن ابن شهاب، قال قال سالم كان عبد الله يصلي على دابته من الليل وهو مسافر، ما يبالي حيث ما كان وجهه. قال ابن عمر وكان رسول الله صلى الله عليه وسلم يسبح على الراحلة قبل اى وجه توجه، ويوتر عليها، غير انه لا يصلي عليها المكتوبة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Shortening the Prayers (At-Taqseer)
- Hadith Index
- #1098
- Book Index
- 18
Grades
- -
