ஹதீஸ்கள்
#1090
ஸஹீஹ் அல்-புகாரீ - Shortening the Prayers (At-Taqseer)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் தொழுகை இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டிரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் (தொழும் லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய தொழுகைகள் நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டன. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) உர்வா (ரஹ்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைப்பாடு என்ன (அவர்கள் ஏன் பயணத்தில் சுருக் கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார் கள்?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கம் கூறியதைப் போன்று ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கம் கூறிவந்தார் கள் என்று பதிலளித்தார்கள்.10 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا سفيان، عن الزهري، عن عروة، عن عايشة رضى الله عنها قالت الصلاة اول ما فرضت ركعتين فاقرت صلاة السفر، واتمت صلاة الحضر. قال الزهري فقلت لعروة ما بال عايشة تتم قال تاولت ما تاول عثمان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Shortening the Prayers (At-Taqseer)
- Hadith Index
- #1090
- Book Index
- 11
Grades
- -
