ஹதீஸ்கள்
#1078
ஸஹீஹ் அல்-புகாரீ - Prostration During Recital of Qur'an
அபூராஃபிஉ நுஃபைஉ அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷா தொழுகையைத் தொழுதேன். அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (அதில் சஜ்தா வசனம் (21) வந்த) உடன் சஜ்தா செய்தார்கள். அவர்களிடம் நான், “என்ன இது? (ஏன் தொழுகையிலேயே சஜ்தா செய்தீர்கள்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காக சஜ்தா செய்துள்ளேன். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும்வரை (அதாவது இறக்கும்வரை) அதை நான் ஓதினால் சஜ்தா செய்வேன்” என்று கூறினார்கள்.10 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا معتمر، قال سمعت ابي قال، حدثني بكر، عن ابي رافع، قال صليت مع ابي هريرة العتمة فقرا {اذا السماء انشقت} فسجد فقلت ما هذه قال سجدت بها خلف ابي القاسم صلى الله عليه وسلم فلا ازال اسجد فيها حتى القاه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prostration During Recital of Qur'an
- Hadith Index
- #1078
- Book Index
- 12
Grades
- -
