ஹதீஸ்கள்
#1059
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உலகமுடிவு நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்ற வர்களாக எழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். நிற்றல், குனிதல், சிரவணக்கம் ஆகிய வற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒருபோதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), “அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக் காகவும் ஏற்படுவனவல்ல. எனினும், அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கின்றான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், அல்லாஹ்வை நினைவுகூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، قال حدثنا ابو اسامة، عن بريد بن عبد الله، عن ابي بردة، عن ابي موسى، قال خسفت الشمس، فقام النبي صلى الله عليه وسلم فزعا، يخشى ان تكون الساعة، فاتى المسجد، فصلى باطول قيام وركوع وسجود رايته قط يفعله وقال " هذه الايات التي يرسل الله لا تكون لموت احد ولا لحياته، ولكن يخوف الله به عباده، فاذا رايتم شييا من ذلك فافزعوا الى ذكره ودعايه واستغفاره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1059
- Book Index
- 18
Grades
- -
