ஹதீஸ்கள்
#1058
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதில் நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். பிறகு ருகூஉ செய்தார்கள்; ருகூவை நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி (மீண்டும் குர்ஆன்) ஓதினார்கள். அது முதலில் ஓதியதைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (மீண்டும்) ருகூஉ செய்தார்கள்; முதல் ருகூவைவிடக் குறைவாகவே அதை நீட்டினார்கள். பிறகு தலையை உயர்த்தி இரு முறை சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். பின்னர் எழுந்து, முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். பிறகு எழுந்து (உரையாற்றியபோது), “யாருடைய இறப்புக்காகவும் சூரியனுக்கோ சந்திரனுக்கோ கிரகணம் ஏற்படுவதில்லை. மாறாக, அவை இரண்டும் இறைச்சான்றுகளில் இரு சான்றுகளாகும். தன் அடியார்களுக்கு அவற்றை இறைவன் காட்டுகின்றான். எனவே, அதை நீங்கள் காணும்போது, தொழுகைக்கு விரையுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، وهشام بن عروة، عن عروة، عن عايشة رضى الله عنها قالت كسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم فقام النبي صلى الله عليه وسلم فصلى بالناس، فاطال القراءة، ثم ركع فاطال الركوع، ثم رفع راسه فاطال القراءة، وهى دون قراءته الاولى، ثم ركع فاطال الركوع دون ركوعه الاول، ثم رفع راسه فسجد سجدتين، ثم قام فصنع في الركعة الثانية مثل ذلك، ثم قام فقال " ان الشمس والقمر لا يخسفان لموت احد ولا لحياته، ولكنهما ايتان من ايات الله يريهما عباده، فاذا رايتم ذلك فافزعوا الى الصلاة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1058
- Book Index
- 17
Grades
- -
