ஹதீஸ்கள்
#1056
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதப் பெண் என்னிடம் யாசித்த படி வந்தாள். அப்போது அவள் என்னிடம், “மண்ணறையின் (கப்று) வேதனையி-ருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவானாக!” என்று கூறினாள். ஆகவே, நான் இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி, “மனிதர் கள் தம் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதிலிருந்து நானும் அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். பின்னர் (ஒரு நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊர்தியில் ஏறிப் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டு விடவே, உடனே அவர்கள் முற்பகல் நேரத்தில் திரும்பி வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு அருகில் தம் துணைவி யர் வசிக்கும்) அறைகளைக் கடந்து சென்று (கிரகணத் தொழுகை) தொழ நின் றார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களும் அணிவகுத்து நின்றனர். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் அவர்கள் நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூஉவி-ருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முதல் நிலையைவிடக் குறைவானதாகவே அமைந்திருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவி-ருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் சஜ்தா செய்தார்கள். பிறகு (எழுந்து) நீண்ட நேரம் நிலை யில் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவி-ருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையைவிடக் குறைவான தாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். இது முந்திய ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு சஜ்தா செய்தார்கள். இது முந்திய சஜ்தாவைவிடக் குறைவானதாக இருந்தது. தொழுது முடித்தபின் அல்லாஹ் சொல்ல நாடியிருந்ததைச் சொன்னார்கள். பிறகு மண்ணறையின் (கப்று) வேதனை யி-ருந்து பாதுகாப்புக் கோருமாறு மக்களைப் பணித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1056
- Book Index
- 15
Grades
- -