ஹதீஸ்கள்
#1050
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதப் பெண் என்னிடம் யாசித்த படி வந்தாள். அப்போது அவள் என்னி டம், “மண்ணறையின் (கப்று) வேதனை யி-ருந்து உம்மை அல்லாஹ் காப்பாற்று வானாக!” என்று கூறினாள். ஆகவே, நான் இதுபற்றி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “மனிதர் கள் தம் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதிலிருந்து நானும் அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1050
- Book Index
- 10
Grades
- -