ஹதீஸ்கள்
#1048
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. மாறாக, அவற்றின் மூலம் உயர்ந்தோன் அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக் கிறான்.7 இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர் களிடமிருந்து அப்துல் வாரிஸ் (ரஹ்), ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்), கா-த் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ஹம்மாத் பின் சலமா (ரஹ்) ஆகியோர் அறிவிக்கும் அறிவிப்புகளில், “அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக்கிறான்” எனும் வாக்கியம் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا حماد بن زيد، عن يونس، عن الحسن، عن ابي بكرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الشمس والقمر ايتان من ايات الله، لا ينكسفان لموت احد، ولكن الله تعالى يخوف بها عباده ". وقال ابو عبد الله لم يذكر عبد الوارث وشعبة وخالد بن عبد الله وحماد بن سلمة عن يونس " يخوف بها عباده ". وتابعه موسى عن مبارك عن الحسن قال اخبرني ابو بكرة عن النبي صلى الله عليه وسلم. " ان الله تعالى يخوف بهما عباده ". وتابعه اشعث عن الحسن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1048
- Book Index
- 9
Grades
- -
