ஹதீஸ்கள்
#1047
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் (ஹசஃபத்) ஏற்பட்டபோது தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் நின்று ‘தக்பீர் (தஹ்ரீமா)’ கூறி, நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதினார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி, ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறி முன்பு போன்றே நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். இ(ப்போது அவர்கள் ஓதிய)து முன்பு ஓதியதைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். இந்த ருகூஉ முதலில் செய்த ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு நீண்ட நேரம் சஜ்தா செய்தார்கள். பின்னர் இதைப் போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். பிறகு (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்து விட்டிருந்த நிலையில் ‘சலாம்’ கொடுத் தார்கள். பிறகு அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். சூரிய, சந்திர கிரகணங் கள் பற்றி அவர்கள் குறிப்பிடுகையில், “அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، قال حدثنا الليث، حدثني عقيل، عن ابن شهاب، قال اخبرني عروة بن الزبير، ان عايشة، زوج النبي صلى الله عليه وسلم اخبرته. ان رسول الله صلى الله عليه وسلم صلى يوم خسفت الشمس، فقام فكبر، فقرا قراءة طويلة، ثم ركع ركوعا طويلا، ثم رفع راسه، فقال سمع الله لمن حمده. وقام كما هو، ثم قرا قراءة طويلة، وهى ادنى من القراءة الاولى، ثم ركع ركوعا طويلا، وهى ادنى من الركعة الاولى، ثم سجد سجودا طويلا، ثم فعل في الركعة الاخرة مثل ذلك، ثم سلم وقد تجلت الشمس، فخطب الناس، فقال في كسوف الشمس والقمر " انهما ايتان من ايات الله، لا يخسفان لموت احد ولا لحياته، فاذا رايتموهما فافزعوا الى الصلاة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1047
- Book Index
- 8
Grades
- -
