ஹதீஸ்கள்
#1046
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது ஜீவிய காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள் ‘தக்பீர் (தஹ்ரீமா)’ கூறி, நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி, நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். ஆனால், இது முத-ல் ஓதியதைவிடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉ செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது. பின்னர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ என்று கூறி (எழுந்து)விட்டு, சஜ்தா செய்தார்கள். பிறகு இதைப் போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.- இவ்வாறு நான்கு சஜ்தாக்(கள் கொண்ட இரண்டு ரக்அத்)களில் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்குமுன் (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து, இறைவனை அவனுக்குத் தகுதியான தன்மைகளைக் கூறிப் போற்றி(யபின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள் (தமது உரையில்), “(சூரியன் மற்றும் சந்திரன்) இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் (கிரகணத்) தொழுகையில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (எனக்கு இதை அறிவித்த) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், “மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்ட தினம் உங்கள் சகோதரர் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் - ர-) (தலா ஒரு ருகூஉ கொண்ட) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக்காமல் சுப்ஹு தொழுகை போன்று தொழுவித்தார்களே?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “ஆம்! (அவர் அவ்வாறு தொழுவித்தார்.) அவர் நபிவழியைத் தவறவிட்டார்” என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாகவும் இதுபோன்ற ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவை கஸீர் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ளன. அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، قال حدثني الليث، عن عقيل، عن ابن شهاب، ح وحدثني احمد بن صالح، قال حدثنا عنبسة، قال حدثنا يونس، عن ابن شهاب، حدثني عروة، عن عايشة، زوج النبي صلى الله عليه وسلم قالت خسفت الشمس في حياة النبي صلى الله عليه وسلم فخرج الى المسجد فصف الناس وراءه، فكبر فاقترا رسول الله صلى الله عليه وسلم قراءة طويلة، ثم كبر فركع ركوعا طويلا، ثم قال سمع الله لمن حمده. فقام ولم يسجد، وقرا قراءة طويلة، هي ادنى من القراءة الاولى، ثم كبر وركع ركوعا طويلا، وهو ادنى من الركوع الاول، ثم قال سمع الله لمن حمده، ربنا ولك الحمد. ثم سجد، ثم قال في الركعة الاخرة مثل ذلك، فاستكمل اربع ركعات في اربع سجدات، وانجلت الشمس قبل ان ينصرف، ثم قام فاثنى على الله بما هو اهله ثم قال " هما ايتان من ايات الله، لا يخسفان لموت احد ولا لحياته، فاذا رايتموهما فافزعوا الى الصلاة ". وكان يحدث كثير بن عباس ان عبد الله بن عباس رضى الله عنهما كان يحدث يوم خسفت الشمس بمثل حديث عروة عن عايشة. فقلت لعروة ان اخاك يوم خسفت بالمدينة لم يزد على ركعتين مثل الصبح. قال اجل لانه اخطا السنة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1046
- Book Index
- 7
Grades
- -
