ஹதீஸ்கள்
#1044
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவை நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவி-ருந்து) எழுந்து நின்றார்கள். அந்த நிலையை நீண்ட நேரம் செய்தார்கள். -இந்த நிலையானது முதல் நிலையை விடச் சிறியதாகவே இருந்தது.- பிறகு (மீண்டும்) ருகூஉ செய்தார்கள். அதை நீண்ட நேரம் செய்தார்கள் -அது முதல் ருகூவைவிடக் குறைவாக இருந்தது- பிறகு சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுகையை முடித்தார்கள். பிறகு அவர்கள் மக்களுக்கு உரை யாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்), “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால், அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்; தக்பீர் சொல்லுங்கள்; தொழுங் கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, “முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அறிவதை யெல்லாம் நீங்களும் அறிந்தால் குறை வாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர் கள்!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، انها قالت خسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم بالناس، فقام فاطال القيام، ثم ركع فاطال الركوع، ثم قام فاطال القيام وهو دون القيام الاول، ثم ركع فاطال الركوع، وهو دون الركوع الاول، ثم سجد فاطال السجود، ثم فعل في الركعة الثانية مثل ما فعل في الاولى، ثم انصرف وقد انجلت الشمس، فخطب الناس، فحمد الله، واثنى عليه ثم قال " ان الشمس والقمر ايتان من ايات الله، لا ينخسفان لموت احد ولا لحياته، فاذا رايتم ذلك فادعوا الله وكبروا، وصلوا وتصدقوا ". ثم قال " يا امة محمد، والله ما من احد اغير من الله ان يزني عبده او تزني امته، يا امة محمد، والله لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1044
- Book Index
- 5
Grades
- -
