ஹதீஸ்கள்
#1040
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக்கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்க ளும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும்வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு, “யாருடைய இறப்புக்காகவும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால், உங்களுக்கு ஏற்பட்ட (கிரகணமான)து அகற்றப்படும்வரை நீங்கள் தொழுங்கள்; பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن عون، قال حدثنا خالد، عن يونس، عن الحسن، عن ابي بكرة، قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فانكسفت الشمس، فقام النبي صلى الله عليه وسلم يجر رداءه حتى دخل المسجد، فدخلنا فصلى بنا ركعتين، حتى انجلت الشمس فقال صلى الله عليه وسلم " ان الشمس والقمر لا ينكسفان لموت احد، فاذا رايتموهما فصلوا، وادعوا، حتى يكشف ما بكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1040
- Book Index
- 1
Grades
- -
