ஹதீஸ்கள்
#1023
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்காக மழைவேண்டிப் பிரார்த்திக்க மக்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். நின்றவண்ணமே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு ‘கிப்லா’ திசை நோக்கித் திரும்பினார்கள். தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார் கள். மக்களுக்கு மழை பொழிந்தது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال حدثني عباد بن تميم، ان عمه وكان من اصحاب النبي صلى الله عليه وسلم اخبره ان النبي صلى الله عليه وسلم خرج بالناس يستسقي لهم، فقام فدعا الله قايما، ثم توجه قبل القبلة، وحول رداءه فاسقوا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1023
- Book Index
- 18
Grades
- -
