ஹதீஸ்கள்
#1022
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்த திறந்தவெளிக்குப்) புறப்பட்டுச் சென்றார் கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகி யோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரி னார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.10 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துள் ளார்கள். அத்தியாயம் :
وقال لنا ابو نعيم عن زهير، عن ابي اسحاق، خرج عبد الله بن يزيد الانصاري وخرج معه البراء بن عازب وزيد بن ارقم رضى الله عنهم فاستسقى، فقام بهم على رجليه على غير منبر فاستغفر، ثم صلى ركعتين يجهر بالقراءة ولم يوذن، ولم يقم. قال ابو اسحاق وراى عبد الله بن يزيد النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1022
- Book Index
- 17
Grades
- -
