ஹதீஸ்கள்
#1021
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து உரத்த குர-ல், “அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்துவிட்டது; (பச்சை) மரங்கள் (காய்ந்து) சிவந்துவிட்டன; கால்நடைகள் அழிந்துவிட்டன. எனவே, மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்?” என்று கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று (இரு முறை) கூறி னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது வானத்தில் ஒரு சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் உருவாகி மழை பொழிந்தது. நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையி-ருந்து இறங்கி (ஜுமுஆ தொழுகை) தொழுவித்தார்கள்; தொழுகையை முடித்தார்கள். அப்போதும் மழை விடாமல் அடுத்த ஜுமுஆவரை நீடித்தது. (அந்த ஜுமுஆவில்) நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி மக்கள் எழுந்து, “(பெரு மழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நம்மைவிட்டு மழையை நிறுத்துவான்” என்று உரத்த குர-ல் கூறினர். நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டு) புன்னகை புரிந்தார்கள். பின்னர் “அல்லாஹும்ம! ஹவாலைனா; வ லா அலைனா” (“இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு இதைத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே!”) என்று பிரார்த்தித்தார்கள். உடனே (சூழ்ந்திருந்த மேகம் விலகி) மதீனா தெளிவடைந்தது. அதன் சுற்றுப்புறங்களில் மழை பொழியலாயிற்று. மதீனாவில் ஒரு துளி மழைகூடப் பெய்ய வில்லை. அப்போது நான் மதீனாவை நோக்கினேன். அது கிரீடத்திற்குள் இருப்பதைப் போன்று (அதாவது நகரைச் சுற்றி மேகங்கள் சூழ நடுவில் இருப்பதைப் போன்று) இருந்தது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1021
- Book Index
- 16
Grades
- -