ஹதீஸ்கள்
#1020
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் கூறினார்கள்: குறைஷி (இணைவைப்பாளர்)கள் இஸ்லாத்தை ஏற்காமல் காலம் தாழ்த்தியபோது, (அவர்களைத் திருத்த) அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். இதனால் அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, (பட்டினியால்) அழிவைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் (பட்டினியால்) செத்தவற்றையும் எலும்புகளையும் புசிக்கலாயினர். இந்நிலையில் (குறைஷி இணைவைப் பாளர்களின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உறவுகளைப் பேணுமாறு உத்தரவிட்டபடி நீர் வந்தீர். உமது சமுதாயமோ அழிந்து கொண்டிருக்கின்றது. எனவே, (பஞ்சம் விலக) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீர்” (44:10) எனும் வசனத்தை ஓதிக் காட்டி னார்கள். (பஞ்சம் விலகியதும் பழையபடி) குறைஷியர் தம் இறைமறுப்புக்கே திரும் பிச் சென்றுவிட்டனர். இதைத்தான் “(அவர்களை) நாம் பலமாகப் பிடிக்கும் நாளில்” (44:16) எனும் வசனம் குறிப்பிடு கின்றது. (இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ என்பது) பத்ர் போர் தினமாகும். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். மக்களுக்கு மழை பொழிந்தது. ஏழு நாட்கள் அடை மழை பெய்தது. கனமழை குறித்து மக்கள் (நபியவர்களிடம்) முறையிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே உச்சியிலிருந்த மேகம் விலகியது. சுற்றுப்புற மக்களுக்கு மழை பொழிந்தது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1020
- Book Index
- 15
Grades
- -