ஹதீஸ்கள்
#1019
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்து விட்டன; போக்குவரத்து தடைப்பட்டு விட்டது. (மழை வேண்டி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் வின் தூதரே! (கனமழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப் பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவை விட்டு ஆடை விலகுவதைப் போன்று விலகிவிட்டது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1019
- Book Index
- 14
Grades
- -