ஹதீஸ்கள்
#1017
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத் தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து மறு ஜுமுஆவரை மக்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கன மழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்துவிட்டன” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவைவிட்டு ஆடை விலகுவதைப் போன்று விலகிவிட்டது. அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن شريك بن عبد الله بن ابي نمر، عن انس بن مالك، قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، هلكت المواشي وانقطعت السبل، فادع الله، فدعا رسول الله صلى الله عليه وسلم فمطروا من جمعة الى جمعة، فجاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، تهدمت البيوت وتقطعت السبل وهلكت المواشي. فقال رسول الله صلى الله عليه وسلم " اللهم على رءوس الجبال والاكام وبطون الاودية ومنابت الشجر ". فانجابت عن المدينة انجياب الثوب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1017
- Book Index
- 12
Grades
- -
