ஹதீஸ்கள்
#1016
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து அடுத்த ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) அதே மனிதர் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப் பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் மழையை நிறுத்துவான்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து, “இறைவா! குன்றுகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியனவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே அம்மேகம் ஆடை விலகுவதைப் போன்று (மதீனாவி-ருந்து) விலகிவிட்டது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن شريك بن عبد الله، عن انس، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال هلكت المواشي وتقطعت السبل. فدعا، فمطرنا من الجمعة الى الجمعة، ثم جاء فقال تهدمت البيوت وتقطعت السبل، وهلكت المواشي فادع الله يمسكها. فقام صلى الله عليه وسلم فقال " اللهم على الاكام والظراب والاودية ومنابت الشجر ". فانجابت عن المدينة انجياب الثوب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1016
- Book Index
- 11
Grades
- -
