ஹதீஸ்கள்
#1015
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்துவிட்டது. ஆகவே, எங்களுக்கு மழை பொழியச்செய்யுமாறு அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். எங்களுக்கு மழை பெய்தது. (எந்த அளவுக்கென்றால்) எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியவில்லை. அடுத்த ஜுமுஆவரை எங்களுக்கு மழை நீடித்தது. (அந்த ஜுமுஆவில்) ‘அந்த மனிதரோ’ அல்லது ‘மற்றொரு மனிதரோ’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இ(ந்த மழை மேகத்)தை எங்களைவிட்டு (வேறு பகுதிக் குத்) திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப் புறங்கள்மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக)! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!” என்று பிரார்த் தித்தார்கள். உடனே அம்மேகம் வலப் புறமும் இடப் புறமுமாகப் பிரிந்து சென்று அங்கிருந்தவர்களுக்குப் பொழிந்தது. மதீனாவாசிகளுக்கு மழை பொழிய வில்லை. அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا ابو عوانة، عن قتادة، عن انس، قال بينما رسول الله صلى الله عليه وسلم يخطب يوم الجمعة اذ جاء رجل فقال يا رسول الله، قحط المطر فادع الله ان يسقينا. فدعا فمطرنا، فما كدنا ان نصل الى منازلنا فما زلنا نمطر الى الجمعة المقبلة. قال فقام ذلك الرجل او غيره فقال يا رسول الله ادع الله ان يصرفه عنا. فقال رسول الله صلى الله عليه وسلم " اللهم حوالينا ولا علينا ". قال فلقد رايت السحاب يتقطع يمينا وشمالا يمطرون ولا يمطر اهل المدينة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1015
- Book Index
- 10
Grades
- -
