ஹதீஸ்கள்
#1002
ஸஹீஹ் அல்-புகாரீ - Witr Prayer
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததா என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “(ஆம்) குனூத் இருந்தது” என்று பதிலளித்தார்கள். நான், “ருகூஉவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉ விற்கு முன்புதான்” என்று பதிலளித் தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே?” என்று கேட்டேன். அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் ருகூஉவிற்குப் பிறகு குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (குர்ரா) என்று அழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபது பேரை இணைவைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்திருந்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க, அந்த எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான், அவர்களுக்கெதிராகப் பிரார்த்திக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குனூத்’ (இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا عبد الواحد، قال حدثنا عاصم، قال سالت انس بن مالك عن القنوت،. فقال قد كان القنوت. قلت قبل الركوع او بعده قال قبله. قال فان فلانا اخبرني عنك انك قلت بعد الركوع. فقال كذب، انما قنت رسول الله صلى الله عليه وسلم بعد الركوع شهرا اراه كان بعث قوما يقال لهم القراء زهاء سبعين رجلا الى قوم من المشركين دون اوليك، وكان بينهم وبين رسول الله صلى الله عليه وسلم عهد فقنت رسول الله صلى الله عليه وسلم شهرا يدعو عليهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witr Prayer
- Hadith Index
- #1002
- Book Index
- 13
Grades
- -
