ஹதீஸ்கள்
#992
ஸஹீஹ் அல்-புகாரீ - Witr Prayer
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். நான் ஓர் தலையணை யின் அகலவாட்டில் தலைசாய்த்து உறங்கி னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அத்தலையணையின் நீளவாட்டில் தலைசாய்த்து உறங்கினர். நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்கு நெருக்கமான நேரம்வரை உறங்கினார்கள். அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தம் முகத்தி-ருந்த தூக்க(க் கலக்க)த்தை (தமது கரத்தால்) துடைக்கலானார்கள். பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் (கடைசிப்) பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கட்டித் தொங்கவிடப்பட்டி ருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதி-ருந்து தண்ணீர் சரித்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். தமது உளூவைச் செம்மையாகச் செய்துகொண்டபின் அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்ததைப் போன்று நானும் (அங்கத்தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இட)ப் பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து எனது காதை திருகிப்பிடித்(து என்னைத் தமது வலப் பாகத்தில் நிறுத்திவைத்)தார்கள். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ர் தொழுதார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளர் (‘பிலால்’ பாங்கு சொல்-விட்டு) தம்மிடம் வரும்வரை ஒருக்களித்துப் படுத்திருந் தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹு டைய சுன்னத்) தொழுதார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழுகையை (இமாமாக நின்று) தொழுதார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن مخرمة بن سليمان، عن كريب، ان ابن عباس، اخبره انه، بات عند ميمونة، وهى خالته، فاضطجعت في عرض وسادة، واضطجع رسول الله صلى الله عليه وسلم واهله في طولها، فنام حتى انتصف الليل او قريبا منه، فاستيقظ يمسح النوم عن وجهه، ثم قرا عشر ايات من ال عمران، ثم قام رسول الله صلى الله عليه وسلم الى شن معلقة، فتوضا فاحسن الوضوء، ثم قام يصلي فصنعت مثله فقمت الى جنبه، فوضع يده اليمنى على راسي، واخذ باذني يفتلها، ثم صلى ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم اوتر، ثم اضطجع حتى جاءه الموذن فقام فصلى ركعتين ثم، خرج فصلى الصبح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witr Prayer
- Hadith Index
- #992
- Book Index
- 3
Grades
- -
