ஹதீஸ்கள்
#983
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுகைக்குப்பின் எங்களிடையே (குத்பா) உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்), “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நமது குர்பானியைப் போன்று குர்பானி கொடுக்கிறாரோ அவரே (குர்பானி) வழிபாட்டை (முறைப்படி) நிறைவேற்றியவராவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அது இறைச்சி(க்காக அறுக்கப் பட்ட) ஆடுதான் (குர்பானி ஆடன்று)” என்று கூறினார்கள். அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான், ‘இன்றைய தினம் உண்பதற்கும் குடிப்பதற்கும் உரிய தினம்’ என்று கருதிக்கொண்டு, தொழுகைக்குப் புறப்பட்டு வருவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன். நான் அவசரப்பட்டுவிட்டேன். நானும் சாப்பிட்டேன்; என் குடும்பத் தாரையும் என் அண்டை வீட்டாரையும் சாப்பிடச் செய்தேன்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பெருநாள் தொழுகைக்கு முன்பே அறுக்கப்பட்ட) அந்த ஆடு இறைச்சி ஆடு தான் (குர்பானி ஆடன்று)” என்றார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், “அவ்வாறாயின், ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று என்னிடம் உள்ளது. அது (கொழுத்த) இரு இறைச்சி ஆடுகளைவிடச் சிறந்ததாகும். அ(தை நான் அறுப்ப)து எனக்குப் போதுமாகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சரி (நீங்கள் அறுக்கலாம்). உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது போதுமாகாது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا ابو الاحوص، قال حدثنا منصور بن المعتمر، عن الشعبي، عن البراء بن عازب، قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم النحر بعد الصلاة فقال " من صلى صلاتنا ونسك نسكنا فقد اصاب النسك، ومن نسك قبل الصلاة فتلك شاة لحم ". فقام ابو بردة بن نيار فقال يا رسول الله والله لقد نسكت قبل ان اخرج الى الصلاة، وعرفت ان اليوم يوم اكل وشرب فتعجلت واكلت واطعمت اهلي وجيراني. فقال رسول الله صلى الله عليه وسلم " تلك شاة لحم ". قال فان عندي عناق جذعة، هي خير من شاتى لحم، فهل تجزي عني قال " نعم، ولن تجزي عن احد بعدك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #983
- Book Index
- 32
Grades
- -
