ஹதீஸ்கள்
#968
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்), “நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை யாதெனில், (பெருநாள் தொழுகை) தொழுவதுதான்.5 பின்னர் திரும்பி வந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்போம். இவ்வாறு யார் செய்கிறாரோ அவரே நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெருநாள் தொழுகை) தொழுவதற்கு முன்பே (பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக அவசரப்பட்டு (முன்கூட்டியே அறுத்து)விட்ட இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் அறவே சேராது” என்று கூறினார்கள். அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டேன். (ஆனால்) என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது; அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்தது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “‘முத-ல் அறுத்ததற்குப் பதிலாக ‘இதை வைத்துக்கொள்வீராக’ அல்லது ‘இதை அறுத்துவிடுவீராக’. ஆனால், உங்களுக் குப் பிறகு வேறெவருக்கும் ஒரு வயதுடைய வெள்ளாட்டுக்குட்டி ஒரு போதும் போதுமாகாது” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن زبيد، عن الشعبي، عن البراء، قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم النحر قال " ان اول ما نبدا به في يومنا هذا ان نصلي ثم نرجع فننحر، فمن فعل ذلك فقد اصاب سنتنا، ومن ذبح قبل ان يصلي فانما هو لحم عجله لاهله، ليس من النسك في شىء ". فقام خالي ابو بردة بن نيار فقال يا رسول الله، انا ذبحت قبل ان اصلي وعندي جذعة خير من مسنة. قال " اجعلها مكانها او قال اذبحها ولن تجزي جذعة عن احد بعدك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #968
- Book Index
- 17
Grades
- -
