ஹதீஸ்கள்
#967
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (உடல் நலம் விசாரிக்க) ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் அருகில் நானும் இருந்தேன். ஹஜ்ஜாஜ் (இப்னு உமரிடம்) அவர் எப்படி இருக்கிறார்? என்று வினவினார். தாம் நலமுடன் இருப்பதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். பிறகு “உம்மைத் தாக்கியவர் யார்?” என்று கேட்டார் ஹஜ்ஜாஜ். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாத (பெருநாள்) தினத்தில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கினார்” என்று -ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக்- குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يعقوب، قال حدثني اسحاق بن سعيد بن عمرو بن سعيد بن العاص، عن ابيه، قال دخل الحجاج على ابن عمر وانا عنده، فقال كيف هو فقال صالح. فقال من اصابك قال اصابني من امر بحمل السلاح في يوم لا يحل فيه حمله، يعني الحجاج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #967
- Book Index
- 16
Grades
- -
