ஹதீஸ்கள்
#966
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (வாகனத்தில் அமர்ந்திருந்த) இப்னு உமர் (ரலி) அவர்களின் உள்ளங்கா-ல் (ஹிஜாஸின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் ஆட்களில் ஒருவர் பாய்ச்சிய) ஈட்டியின் முனை பாய்ந்தபோது, நானும் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களின் பாதம் வாகனத்தில் ஒட்டிக் கொண்டது. உடனே நான் (வாகனத்தி-ருந்து) இறங்கி அதைப் பிடுங்கி எடுத்தேன். -இது மினாவில் இருந்தபோது நடந்தது.- இந்தச் செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டி, அவர் இப்னு உமர் (ரலி) அவர் களை உடல் நலம் விசாரிக்க (வர)லானார். அப்போது ஹஜ்ஜாஜ், “உங்களைத் தாக்கியவர் யாரென்று தெரிந்தால் (தக்க நடவடிக்கை எடுப்போம்)” என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீர்தான் என்னைத் தாக்கினீர்” என்றார்கள். “அது எப்படி?” என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆயுதம் எடுத்துச் செல்லக் கூடாத (பெரு நாள்) தினத்தில் நீர்தான் ஆயுதம் ஏந்திட உத்தரவிட்டீர். ஹரம் புனித எல்லைக்குள் ஆயுதம் கொண்டுவரக் கூடாது என்றி ருக்க, ஹரமுக்குள் ஆயுதங்களை நடமாட விட்டதும் நீர்தான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا زكرياء بن يحيى ابو السكين، قال حدثنا المحاربي، قال حدثنا محمد بن سوقة، عن سعيد بن جبير، قال كنت مع ابن عمر حين اصابه سنان الرمح في اخمص قدمه، فلزقت قدمه بالركاب، فنزلت فنزعتها وذلك بمنى، فبلغ الحجاج فجعل يعوده فقال الحجاج لو نعلم من اصابك. فقال ابن عمر انت اصبتني. قال وكيف قال حملت السلاح في يوم لم يكن يحمل فيه، وادخلت السلاح الحرم ولم يكن السلاح يدخل الحرم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #966
- Book Index
- 15
Grades
- -
