ஹதீஸ்கள்
#965
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஈதுல் அள்ஹா பெருநாளின்போது) நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது (யாதெனில்), நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையி-ருந்து திரும்பிவந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்போம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றிவிட்டார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானி பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொன்னார்கள். அப்போது அன்சாரிகளில் அபூபுர்தா பின் நியார் எனப்படும் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தொழுகைக்கு முன்பே நான் குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டை விடச் சிறந்தது (அதை நான் அறுக்க லாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “முத-ல் அறுத்த தற்குப் பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் ஒருபோதும் ‘அது நிறைவேறாது’ அல்லது ‘போதுமாகாது’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #965
- Book Index
- 14
Grades
- -