ஹதீஸ்கள்
#964
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்கள் (கூடுதலாக எதையும்) தொழ வில்லை. (உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு நபி (ஸல்) அவர்கள் வந்து (அறிவுரை கூறினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித் தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந் ததை பிலால் அவர்களின் கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும் தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن عدي بن ثابت، عن سعيد بن جبير، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم صلى يوم الفطر ركعتين، لم يصل قبلها ولا بعدها، ثم اتى النساء ومعه بلال، فامرهن بالصدقة، فجعلن يلقين، تلقي المراة خرصها وسخابها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #964
- Book Index
- 13
Grades
- -
