ஹதீஸ்கள்
#956
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிவாச-ல் தொழாமல்) திடலுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களாக இருந்தார்கள். அங்கு அவர்கள் செய்யும் முதல்வேலை தொழுவதேயாகும். (தொழுகை முடிந்த) பின்னர் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள். மக்கள் அனைவரும் அப்படியே தத்தம் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். அப்போது மக்களுக்கு அவர்கள் உபதேசம் புரிவார்கள்; (வ-யுறுத்த வேண்டியதை) அவர்களுக்கு வ-யுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டி யதை) அவர்களுக்குக் கட்டளையிடு வார்கள். (ஏதேனும் ஒரு பகுதிக்கு) படைப் பிரிவுகளை அனுப்ப நினைத்திருந்தால் அனுப்பிவைப்பார்கள். அல்லது எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந் தால் உத்தரவிடுவார்கள். (இவற்றை முடித்த) பின்னரே (மதீனாவுக்கு) திரும்பிச் செல்வார்கள். இவ்வாறே மக்கள் செயல்பட்டு வந்தனர்; மதீனாவின் ஆளுநராக மர்வான் பின் ஹகம் ஆகும்வரை. அவருடன் ஒரு ஹஜ்ஜுப் பெருநாளிலோ அல்லது நோன்புப் பெருநாளிலோ நான் (தொழச்) சென்றேன். நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் பின் ஸல்த் அவர்கள் உருவாக்கிய சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்று அங்கே தீடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் (பெருநாள் தொழுகையைத்) தொழுவிப்பதற்கு முன்பே சொற்பொழிவு மேடையில் ஏறப்போனார். உடனே நான் (முத-ல் தொழுவித்துவிட்டுப் பிறகு உரையாற்றும்படி கோர) அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் (சொற்பொழிவு மேடையில்) ஏறித் தொழுகைக்கு முன்பே உரை (குத்பா) நிகழ்த்தலானார். அப்போது நான் அவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிவழியை) மாற்றிவிட்டீர்கள்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “அபூசயீதே! நீங்கள் அறிந்திருக்கும் (அந்த) நடைமுறை மலையேறிவிட்டது” என்று சொன்னார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்திருக்கும் (நபியவர்களின்) நடைமுறைதான் நான் அறியாத (இந்தப் புதிய) நடைமுறையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “மக்கள் தொழுகை முடிந்துவிட்டால் எம(து உரை)க்காக அமர்ந்துகொண்டிருக்கமாட்டார்கள். எனவே, நான் உரையைத் தொழுகைக்கு முன்பே வைத்துக்கொண்டேன்” என்று சொன்னார். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، قال حدثنا محمد بن جعفر، قال اخبرني زيد، عن عياض بن عبد الله بن ابي سرح، عن ابي سعيد الخدري، قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والاضحى الى المصلى، فاول شىء يبدا به الصلاة ثم ينصرف، فيقوم مقابل الناس، والناس جلوس على صفوفهم، فيعظهم ويوصيهم ويامرهم، فان كان يريد ان يقطع بعثا قطعه، او يامر بشىء امر به، ثم ينصرف. قال ابو سعيد فلم يزل الناس على ذلك حتى خرجت مع مروان وهو امير المدينة في اضحى او فطر، فلما اتينا المصلى اذا منبر بناه كثير بن الصلت، فاذا مروان يريد ان يرتقيه قبل ان يصلي، فجبذت بثوبه فجبذني فارتفع، فخطب قبل الصلاة، فقلت له غيرتم والله. فقال ابا سعيد، قد ذهب ما تعلم. فقلت ما اعلم والله خير مما لا اعلم. فقال ان الناس لم يكونوا يجلسون لنا بعد الصلاة فجعلتها قبل الصلاة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #956
- Book Index
- 8
Grades
- -
