ஹதீஸ்கள்
#955
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களுக்குத் தொழுகைக்குப்பின் உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நமது குர்பானியைப் போன்று குர்பானி கொடுக்கிறாரோ அவரே (குர்பானி) வழிபாட்டை (முறைப்படி) முடித்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டாரோ அது தொழுகைக்கு முன்புள்ளதாகும். அவரது குர்பானிவழிபாடு நிறைவேறாது” என்று கூறினார்கள். அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றைய தினம் உண்பதற்கும் குடிப்பதற்கும் உரிய நாள் என்று அறிந்தேன். எனது வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன் ஆகவே, (பெருநாள்) தொழுகைக்கு வருவதற்கு முன்பே நான் அறுத்துவிட்டேன். காலைச் சிற்றுண்டியாக வும் (அதை) உட்கொண்டும்விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நீர் அறுத்த) உமது ஆடு இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடு என்றே கருதப்படும்” என்று கூறினார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்திருப்பதால்) இரண்டு ஆடுகளை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும். அ(தை நான் அறுப்ப)து எனக்குப் போதுமாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம் (உமக்கு மட்டும் அது போதுமாகும்.) உமக்குப் பிறகு வேறெவருக்கும் ஒருபோதும் அது போதுமாகாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان، قال حدثنا جرير، عن منصور، عن الشعبي، عن البراء بن عازب رضى الله عنهما قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم الاضحى بعد الصلاة فقال " من صلى صلاتنا ونسك نسكنا فقد اصاب النسك، ومن نسك قبل الصلاة فانه قبل الصلاة، ولا نسك له ". فقال ابو بردة بن نيار خال البراء يا رسول الله، فاني نسكت شاتي قبل الصلاة، وعرفت ان اليوم يوم اكل وشرب، واحببت ان تكون شاتي اول ما يذبح في بيتي، فذبحت شاتي وتغديت قبل ان اتي الصلاة. قال " شاتك شاة لحم ". قال يا رسول الله، فان عندنا عناقا لنا جذعة هي احب الى من شاتين، افتجزي عني قال " نعم، ولن تجزي عن احد بعدك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #955
- Book Index
- 7
Grades
- -
