ஹதீஸ்கள்
#954
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று) நபி (ஸல்) அவர்கள், “யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டைவீட்டார் சிலர் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழு கைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். அவர் சொன்ன காரணத்தை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டதைப் போன்று தெரிந்தது. மேலும் அவர், “என்னிடம் இறைச்சி ஆடுகள் இரண்டைவிட நான் பெரிதும் விரும்பும் ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாடு) ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்க, நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதியளித்தார்கள்.3 இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பது எனக்குத் தெரியாது. அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا اسماعيل، عن ايوب، عن محمد، عن انس، قال قال النبي صلى الله عليه وسلم " من ذبح قبل الصلاة فليعد ". فقام رجل فقال هذا يوم يشتهى فيه اللحم. وذكر من جيرانه فكان النبي صلى الله عليه وسلم صدقه، قال وعندي جذعة احب الى من شاتى لحم، فرخص له النبي صلى الله عليه وسلم فلا ادري ابلغت الرخصة من سواه ام لا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #954
- Book Index
- 6
Grades
- -
