ஹதீஸ்கள்
#947
ஸஹீஹ் அல்-புகாரீ - Fear Prayer
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கைபருக்கு அருகில் ஓரிடத்தில்) சுப்ஹு தொழுகையை இருள் இருக்கும்போதே (அதன் ஆரம்ப நேரத்தில்) தொழு(வித்)தார் கள். பிறகு (கைபரை நோக்கிப்) பயணமா னார்கள். (கைபருக்குள் அவர்கள் பிரவேசித்தபோது) “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்); கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப் பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்” என்று (மூன்று முறை) கூறினார்கள். (முஸ்-ம்களைக் கண்ட) கைபர்வாசி கள் வீதிகளில் ஓடிக்கொண்டே, “முஹம்ம தும் அவருடைய ஐந்து அணிகள் கொண்ட படையும் (வருகின்றனர்)” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தாக்குதலைத் தொடங்கி தம்முடன் போரிட்டவர்களை வீழ்த்தினார்கள். (போரில் கலந்துகொள்ளாத) அவர்களுடைய குடும்பத்தாரைக் கைது செய்(து தம் வீரர்களிடையே ஒப்படைத்)தார்கள். அப்போது (பனூ குறைழா, பனூ நளீர் குலங்களின் தலைவரின் புதல்வியான) ஸஃபிய்யா அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச்சேர்ந்தார்கள். (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க) சொந்தமானார்கள். பின்னர் அவரது விடுதலையையே மணக் கொடையாக்கி அவரை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது அவர்களிடம், “அபூமுஹம்மதே! நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுக்கு என்ன மணக்கொடை (மஹ்ர்) கொடுத்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் கேட்டீர்களா?” என நான் வினவினேன். அதற்கு ஸாபித் (ரஹ்) அவர்கள், “அவரையே (அதாவது அவரை விடுதலை செய்வதையே) அவருக்கு மணக்கொடையாக ஆக்கினார்கள்” என்று கூறிவிட்டுப் புன்னகைத்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا حماد، عن عبد العزيز بن صهيب، وثابت البناني، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم صلى الصبح بغلس ثم ركب فقال " الله اكبر خربت خيبر، انا اذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين ". فخرجوا يسعون في السكك ويقولون محمد والخميس قال والخميس الجيش فظهر عليهم رسول الله صلى الله عليه وسلم فقتل المقاتلة وسبى الذراري، فصارت صفية لدحية الكلبي، وصارت لرسول الله صلى الله عليه وسلم ثم تزوجها وجعل صداقها عتقها. فقال عبد العزيز لثابت يا ابا محمد، انت سالت انسا ما امهرها قال امهرها نفسها. فتبسم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fear Prayer
- Hadith Index
- #947
- Book Index
- 6
Grades
- -
