ஹதீஸ்கள்
#946
ஸஹீஹ் அல்-புகாரீ - Fear Prayer
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரி-ருந்து திரும்பியபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) யாரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ர் நேரத்தை மக்கள் சிலர் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழுகையைத் தொழ மாட்டோம்” என்று கூறினர். வேறுசிலர், “(தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் (அவ்வாறு) கூறவில்லை; (‘வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்’ என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்). எனவே, நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறைகூறவில்லை.7 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد بن اسماء، قال حدثنا جويرية، عن نافع، عن ابن عمر، قال قال النبي صلى الله عليه وسلم لنا لما رجع من الاحزاب " لا يصلين احد العصر الا في بني قريظة ". فادرك بعضهم العصر في الطريق فقال بعضهم لا نصلي حتى ناتيها، وقال بعضهم بل نصلي لم يرد منا ذلك. فذكر للنبي صلى الله عليه وسلم فلم يعنف واحدا منهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fear Prayer
- Hadith Index
- #946
- Book Index
- 5
Grades
- -
