ஹதீஸ்கள்
#945
ஸஹீஹ் அல்-புகாரீ - Fear Prayer
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் (ரலி) அவர்கள் குறைஷி இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் நேரம் நெருங்கி யும் என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமற் போய்விட்டது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் தான் இதுவரை அத்தொழுகையைத் தொழவில்லை” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கி அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு, சூரியன் மறைந்தபின் அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழு(வித்)தார்கள் அத்தியாயம் :
حدثنا يحيى، قال حدثنا وكيع، عن علي بن مبارك، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن جابر بن عبد الله، قال جاء عمر يوم الخندق، فجعل يسب كفار قريش ويقول يا رسول الله ما صليت العصر حتى كادت الشمس ان تغيب. فقال النبي صلى الله عليه وسلم " وانا والله ما صليتها بعد ". قال فنزل الى بطحان فتوضا، وصلى العصر بعد ما غابت الشمس، ثم صلى المغرب بعدها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fear Prayer
- Hadith Index
- #945
- Book Index
- 4
Grades
- -
