ஹதீஸ்கள்
#944
ஸஹீஹ் அல்-புகாரீ - Fear Prayer
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (போர்க் களத்தில் அச்சநேரத்) தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் (இரு வரிசைகளில்) அவர்களுடன் நின்றுகொண்டனர். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூற அனைவரும் தக்பீர் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தபோது, அவர்களில் (முதல் வரிசையில் நின்ற) சிலர் (மட்டும்) ருகூஉ செய்தனர். நபி (ஸல்) அவர்கள் சஜ்தா செய்தபோது அவர்களும் அவர்களுடன் சஜ்தா செய்தனர். பிறகு இரண்டாவது ரக்அத்திற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்தபோது, நபி (ஸல்) அவர்களுடன் (முதலாவது ரக்அத்தில்) சஜ்தா செய்தவர்கள் எழுந்து (இரண்டா வது வரிசைக்குச் சென்று நின்று கொண்டு) தம் சகோதரர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். (இரண்டாவது வரிசையில் நின்றுகொண்டிருந்த) அந்த அணியினர் (முதல் வரிசைக்கு) வந்து நபி (ஸல்) அவர்களுடன் ருகூஉம் சஜ்தாவும் செய்தனர். மக்கள் அனைவரும் தொழுகை யில்தான் ஈடுபட்டிருந்தனர். ஆயினும், ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டி ருந்தனர். அத்தியாயம் :
حدثنا حيوة بن شريح، قال حدثنا محمد بن حرب، عن الزبيدي، عن الزهري، عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابن عباس رضى الله عنهما قال قام النبي صلى الله عليه وسلم وقام الناس معه، فكبر وكبروا معه، وركع وركع ناس منهم، ثم سجد وسجدوا معه، ثم قام للثانية فقام الذين سجدوا وحرسوا اخوانهم، واتت الطايفة الاخرى فركعوا وسجدوا معه، والناس كلهم في صلاة، ولكن يحرس بعضهم بعضا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fear Prayer
- Hadith Index
- #944
- Book Index
- 3
Grades
- -
