ஹதீஸ்கள்
#942
ஸஹீஹ் அல்-புகாரீ - Fear Prayer
ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் அச்சநேரத் தொழுகை (ஸலாத்துல் ஃகவ்ஃப்) தொழுதுள்ளார்களா?” என்று கேட்டேன். அதற்கு சா-ம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த (பின்வரும்) ஹதீஸை ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (‘தாத்துர் ரிகாஉ’ எனும்) போருக்காக நஜ்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றேன். அங்கு நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணி வகுத்து நின்றோம். (போர் நடக்காவிட்டா லும் பீதி நிலவிக்கொண்டிருந்த அந்தப் போர் முனையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவிப்பதற்காக நின்றார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) நின்றனர். மற்றோர் அணியினர் எதிரிகளை நோக்கி நின்றனர். நபி (ஸல்) அவர்கள் தம்மோடு இருந்த வர்களுடன் ருகூஉ செய்து இரு சஜ்தாக் கள் செய்தார்கள். பிறகு (நபியவர்களுடன் தொழுத) அந்த அணியினர், தொழாமல் (எதிரிகளைக் கண்காணித்துக்கொண்டு) இருந்த மற்றோர் அணியினரின் இடத்துக் குச் சென்றுவிட்டனர். அந்த அணியினர் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அணியினருடன் ஒரு ருகூஉம் இரு சஜ்தாக்களும் செய்தார்கள்; பிறகு சலாம் கொடுத்தார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து ஒரு ருகூஉம் இரண்டு சஜ்தாக்களும் செய்து (மீதியிருந்த ஒரு ரக்அத்தைத்) தமக்காக நிறைவேற்றிக்கொண்டனர். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال سالته هل صلى النبي صلى الله عليه وسلم يعني صلاة الخوف قال اخبرني سالم ان عبد الله بن عمر رضى الله عنهما قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد، فوازينا العدو فصاففنا لهم فقام رسول الله صلى الله عليه وسلم يصلي لنا فقامت طايفة معه تصلي، واقبلت طايفة على العدو وركع رسول الله صلى الله عليه وسلم بمن معه، وسجد سجدتين، ثم انصرفوا مكان الطايفة التي لم تصل، فجاءوا، فركع رسول الله صلى الله عليه وسلم بهم ركعة، وسجد سجدتين ثم سلم، فقام كل واحد منهم فركع لنفسه ركعة وسجد سجدتين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fear Prayer
- Hadith Index
- #942
- Book Index
- 1
Grades
- -
