ஹதீஸ்கள்
#933
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு முறை பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக் கிழமை அன்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக்கொண்டி ருந்தபோது, ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக் காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரார்த்திக்க) தம் கைகளை ஏந்தினார்கள்.- அப்போது எந்த மழை மேகத்தையும் வானத்தில் நாங்கள் காணவில்லை- என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் தமது கையைக் கீழே விடுவதற்கு முன்பாகவே மலைகளைப் போன்ற மேகங்கள் பரவத் தொடங்கின. நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவு மேடையைவிட்டு இறங்கியிருக்கவில்லை. மழை பெய்து அவர்களது தாடியில் வழிந்ததை நான் பார்த்தேன். எங்களுக்கு அன்றைய தினமும் மறுதினமும் அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த ஜுமுஆ வரையிலும் மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) ‘அதே கிராமவாசி’ அல்லது ‘வேறொருவர்’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்துகொண்டிருக்கின்றன; செல்வங்கள் வெள்ள நீரில் மூழ்குகின்றன. எனவே, எங்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங் கள்” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவாயாக! எங்களுக்கெதிராக (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!” என்று பிரார்த்தித்தார்கள். மேகத்தின் எந்தப் பகுதியை நோக்கி நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார் களோ அம்மேகம் விலகிச் செல்லாமல் இருக்கவில்லை. மதீனா(வைச் சூழ்ந்திருந்த மேகம் விலகியதால் வானில்) வட்டமான பள்ளம் ஏற்பட்டதைப் போன்று மாறியது. ‘கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியி-ருந்து யார் வந்தாலும் இந்த அடை மழை பற்றிப் பேசாமால் இருக்கவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #933
- Book Index
- 57
Grades
- -