ஹதீஸ்கள்
#917
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(நபி (ஸல்) அவர்களது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது என்பது தொடர் பாகச் சர்ச்சை செய்தனர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அது எதனால் செய்யப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். அது வைக்கப்பட்ட முதல் நாளிலேயே நான் அதைப் பார்த்திருக்கி றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன்மீது அமர்ந்த முதல் நாளிலேயே (நான் அதைப் பார்த்திருக்கி றேன்)” என்று கூறிவிட்டு (அது பற்றிய முழுத் தகவலையும் பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்ன பெண்மணியிடம், -அப்பெண்மணியின் பெயரை சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்- ஆளனுப்பி, “நான் மக்களிடையே உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கு (ஏற்ற வகையில்) எனக்காக (சொற்பொழிவு மேடைக்குத் தேவையான) மரச்சட்டங்களைச் செய்து தரும்படி தச்சு வேலை தெரிந்த உன் அடிமைக்குக் கட்டளையிடுவாயாக!” என்று சொல்-யனுப்பினார்கள். அவ்வாறே அப்பெண்மணி அந்த அடிமைக்குக் கட்டளையிட, அவர் (மதீனா அருகிலுள்ள) ‘அல்ஃகாபா’ வனத்திலிருந்த ஒரு வகை சவுக்கு மரத்தினால் அதைச் செய்து அப்பெண்மணியிடம் கொண்டு வந்தார். அதை அப்பெண்மணி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, இதோ இந்த இடத்தில் அது வைக்கப்பட்டது. அதன் பிறகு நான் பார்த்தேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன்மீது நின்று தொழு(வித்)தார்கள். (அதாவது) அதன் மீது நின்று தக்பீர் கூறினார்கள்; அதன் மீது ருகூஉ செய்தார்கள். பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாக்கில் இறங்கி அந்த மேடையின் அடிக்கட்டைப் பகுதியில் சஜ்தா செய்தார் கள். பிறகு பழையபடி (மேடைக்கே) சென்றார்கள். தொழுது முடித்ததும், மக்களை முன் னோக்கி, “மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் எனது தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்” என்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا يعقوب بن عبد الرحمن بن محمد بن عبد الله بن عبد القاري القرشي الاسكندراني، قال حدثنا ابو حازم بن دينار، ان رجالا، اتوا سهل بن سعد الساعدي، وقد امتروا في المنبر مم عوده فسالوه عن ذلك فقال والله اني لاعرف مما هو، ولقد رايته اول يوم وضع، واول يوم جلس عليه رسول الله صلى الله عليه وسلم ارسل رسول الله صلى الله عليه وسلم الى فلانة امراة قد سماها سهل " مري غلامك النجار ان يعمل لي اعوادا اجلس عليهن اذا كلمت الناس ". فامرته فعملها من طرفاء الغابة ثم جاء بها، فارسلت الى رسول الله صلى الله عليه وسلم فامر بها فوضعت ها هنا، ثم رايت رسول الله صلى الله عليه وسلم صلى عليها، وكبر وهو عليها، ثم ركع وهو عليها، ثم نزل القهقرى فسجد في اصل المنبر ثم عاد، فلما فرغ اقبل على الناس فقال " ايها الناس انما صنعت هذا لتاتموا ولتعلموا صلاتي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #917
- Book Index
- 41
Grades
- -
