ஹதீஸ்கள்
#893
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
யூனுஸ் பின் யஸீத் அல்அய்லீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ருஸைக் பின் ஹுகைம் (ரஹ்) அவர்கள் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார் கள். அப்போது ஸுஹ்ரீ (ரஹ்) அவர் களுடன் நானும் (மதீனாவில் உள்ள) ‘வாதில்குரா’ எனும் இடத்தில் இருந்தேன். அக்கடிதத்தில் ருஸைக் அவர்கள், ‘(என்னுடன் இங்கு இருப்போருக்கு) நான் ஜுமுஆ நடத்துவது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டு எழுதியிருந்தார்கள். (அன்றைய நாளில்) ருஸைக் அவர்கள் விளைநில அதிகாரியாக இருந்தார். அந்நிலத்தில் சூடான் நாட்டு மக்கள் சிலரும் வேறுசிலரும் இருந்தனர். ருஸைக் அவர்கள்தான் அப்போது ‘அய்லா’ நகரின் ஆளுநராகவும் இருந்தார். ஆகவே, இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் ருஸைக் அவர்களுக்கு ஜுமுஆ நடத்துமாறு கட்டளை பிறப்பித்து பதில் எழுதினார்கள். (அதை அவர்கள் வாசித் துக்காட்டினார்கள்.) அதை நானும் செவியுற் றுக்கொண்டிருந்தேன். அந்தக் கடிதத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக (அவர்களுடைய புதல்வர்) சா-ம் (ரஹ்) அவர்கள், தமக்கு அறிவித்த பின்வரும் நபிமொழியை (தம் கட்டளைக்கு ஆதார மாக)க் குறிப்பிட்டார்கள் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளி யாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.8 இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “ஓர் ஆண்மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவனுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவனும் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்றும் கூறியதாக நான் எண்ணுகிறேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا بشر بن محمد، قال اخبرنا عبد الله، قال اخبرنا يونس، عن الزهري، قال اخبرنا سالم بن عبد الله، عن ابن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم يقول " كلكم راع ". وزاد الليث قال يونس كتب رزيق بن حكيم الى ابن شهاب وانا معه يوميذ بوادي القرى هل ترى ان اجمع. ورزيق عامل على ارض يعملها، وفيها جماعة من السودان وغيرهم، ورزيق يوميذ على ايلة، فكتب ابن شهاب وانا اسمع يامره ان يجمع، يخبره ان سالما حدثه ان عبد الله بن عمر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " كلكم راع، وكلكم مسيول عن رعيته، الامام راع ومسيول عن رعيته، والرجل راع في اهله وهو مسيول عن رعيته، والمراة راعية في بيت زوجها ومسيولة عن رعيتها، والخادم راع في مال سيده ومسيول عن رعيته قال وحسبت ان قد قال والرجل راع في مال ابيه ومسيول عن رعيته وكلكم راع ومسيول عن رعيته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #893
- Book Index
- 18
Grades
- -
