ஹதீஸ்கள்
#880
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வெள்ளிக்கிழமை குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமை யாகும்; மேலும் பல் துலக்குவதும், கிடைத்தால் நறுமணம் பூசுவதும் கடமை யாகும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளரான அம்ர் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறுதியிட்டுச் சொல்கிறேன். (ஜுமுஆ நாளில்) குளிப்பதோ கடமை (வாஜிப்) என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். ஆனால், பல் துலக்குவதோ நறுமணம் பூசுவதோ கடமையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ஆனால், ஹதீஸில் இவ்வாறுதான் உள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) அபூபக்ர் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள், முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர் ஆவார். அபூபக்ர் பின் அல்முன்கதிர் அவர்களிடமிருந்து புகைர் பின் அஷஜ், சயீத் பின் அபீஹிலால் (ரஹ்) உள்ளிட்ட பலர் (இந்த ஹதீஸை) அறிவித் துள்ளனர். முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களுக்கும் அபூபக்ர், அபூ அப்தில்லாஹ் ஆகிய குறிப்புப் பெயர்கள் உள்ளன. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #880
- Book Index
- 5
Grades
- -