ஹதீஸ்கள்
#602
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) ஏழை மக்களாக இருந்தார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “யாரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை(த் தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு (யாராவது ஒருவரிடம்) இருந்தால், (அவர் தம்முடன்) ஐந்தாமவரையும் (ஐந்து பேருக்குரிய உணவு இருந்தால்) ஆறாமவரையும் அழைத்துச் செல்லட்டும்” என்று கூறினார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (திண்ணைத் தோழர்கள்) மூவருடன் (இல்லத்திற்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப் பேருடன் (தம் இல்லம் நோக்கி) நடந்தார்கள். (என் தந்தை வீட்டுக்கு வந்தபோது வீட்டில்) நானும் (அப்துர் ரஹ்மான்), என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டுக்கும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டுக்கும் கூட்டாகப் பணிபுரிந்துவந்த பணியாளரும் தான் இருந்தோம். -இதன் அறிவிப்பாளரான அபூ உஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘என் மனைவியும்... (இருந்தார்)’ என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்களா என்பது எனக்கு (உறுதியாக)த் தெரியவில்லை (சந்தேகமாகவே இருக்கிறது). அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு), நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு இஷா தொழுகை நடைபெறும்வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும்வரை காத்திருந்துவிட்டு, இரவில் அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்தபிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டுக்கு) வந்தார்கள். அவர்களுடைய துணைவியார் (என் தாயார்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உங்கள் விருந்தாளிகளை’ அல்லது ‘உங்கள் விருந்தாளியை’ (உபசரிக்க வராமல்) தாமதமானதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “விருந்தினருக்கு நீ உணவளிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தாயார், “நீங்கள் வரும் வரை உண்ணமாட்டோம் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எடுத்துச்சொல்-யும் அவர்கள் (உண்ண) மறுத்துவிட்டார்கள்” என்று பதிலளித்தார்கள். (என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள், நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவ னிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்று அஞ்சி) நான் சென்று ஒளிந்துகொண்டேன். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘தடியா!’ (என்றழைத்து என்னை) ‘உன் மூக்கறுந்து போக!’ என்று கூறி ஏசினார்கள். (அவர்கள் உணவருந்த தாமதமான தற்கு அவர்களே காரணம் என்று அறிந்து கொண்டபோது) “மகிழ்ச்சியாக இல்லை; நீங்கள் உண்ணுங்கள்” என்று (தம் விருந்தி னரிடம்) கூறிவிட்டு, (தம் வீட்டாரை நோக்கி, “என்னை எதிர்பார்த்துத்தானே இவ்வளவு நேரம் தாமதம் செய்தீர்கள்!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருபோதும் இதை உண்ணப் போவ தில்லை” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் (பாத்திரத்தி-ருந்து) ஒரு கவள உணவை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியி-ருந்து அதைவிட அதிகமாக உணவு பெருகியது. இறுதியில் அவர்கள் அனைவரும் வயிறார உண்டனர். அப்போது அந்த உணவு முன்பிருந்ததைவிடக் கூடுதலாகிவிட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அ(ந்த பாத்திரத்)தைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதைவிட அதிகமாகக் காணப்பட்டது. உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரிடம் (என் தாயாரிடம்), “பனூ ஃபிராஸ் குலமகளே! என்ன இது?” என்று வினவ, அதற்கு என் தாயார், “எனது கண்குளிர்ச்சியின் மீதாணையாக! இது முன்பிருந்ததைவிட இப்போது மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். அதி-ருந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் உண்டார்கள். மேலும், தமது சத்தியம் குறித்து, “(நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன் என்று என்னை சத்தியம் செய்ய வைத்தது) ஷைத்தான் தான்” என்று கூறிவிட்டு, அதி-ருந்து இன்னும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அ(ந்தப் பாத்திரத்)தை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். பிறகு அது நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று. (அப்போது) எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்கும் இடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. அந்த ஒப்பந்த தவணை முடிவுற்றது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள். ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். (அவ்வளவு பெரிய படையினருடன் அந்த உணவுப் பாத்திரத்தையும் கொடுத்தனுப்பினார்கள்.) அவர்கள் அனைவரும் அதிலிருந்து உண்டனர். (இவ்வாறோ அல்லது) வேறொரு முறையிலோ இதை அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.33 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا معتمر بن سليمان، قال حدثنا ابي، حدثنا ابو عثمان، عن عبد الرحمن بن ابي بكر، ان اصحاب الصفة، كانوا اناسا فقراء، وان النبي صلى الله عليه وسلم قال " من كان عنده طعام اثنين فليذهب بثالث، وان اربع فخامس او سادس ". وان ابا بكر جاء بثلاثة فانطلق النبي صلى الله عليه وسلم بعشرة، قال فهو انا وابي وامي، فلا ادري قال وامراتي وخادم بيننا وبين بيت ابي بكر. وان ابا بكر تعشى عند النبي صلى الله عليه وسلم ثم لبث حيث صليت العشاء، ثم رجع فلبث حتى تعشى النبي صلى الله عليه وسلم فجاء بعد ما مضى من الليل ما شاء الله، قالت له امراته وما حبسك عن اضيافك او قالت ضيفك قال اوما عشيتيهم قالت ابوا حتى تجيء، قد عرضوا فابوا. قال فذهبت انا فاختبات فقال يا غنثر، فجدع وسب، وقال كلوا لا هنييا. فقال والله لا اطعمه ابدا، وايم الله ما كنا ناخذ من لقمة الا ربا من اسفلها اكثر منها. قال يعني حتى شبعوا وصارت اكثر مما كانت قبل ذلك، فنظر اليها ابو بكر فاذا هي كما هي او اكثر منها. فقال لامراته يا اخت بني فراس ما هذا قالت لا وقرة عيني لهي الان اكثر منها قبل ذلك بثلاث مرات. فاكل منها ابو بكر وقال انما كان ذلك من الشيطان يعني يمينه ثم اكل منها لقمة، ثم حملها الى النبي صلى الله عليه وسلم فاصبحت عنده، وكان بيننا وبين قوم عقد، فمضى الاجل، ففرقنا اثنا عشر رجلا، مع كل رجل منهم اناس، الله اعلم كم مع كل رجل فاكلوا منها اجمعون، او كما قال
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #602
- Book Index
- 77
Grades
- -
