ஹதீஸ்கள்
#600
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு நாள் இரவு) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) (அவர்களிடம் மார்க்கக் கல்வி பயில) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவர்கள் (வழக்கத்திற்கு மாறாக அன்று) எங்களிடம் தாமதமாக வந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (வழக்கமாக அவர்கள் எங்களுடன் அமர்ந்துவிட்டு) எழுந்து செல்லும் நேரமும் நெருங்கியது. அப்போது அவர்கள் வந்து, “எம்முடைய இந்த அண்டை வீட்டார் எம்மை அழைத்தனர் (அதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்: அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஒரு (நாள்) இரவில் (இஷா தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். நள்ளிரவு நேரம் ஆகும்போது நபி (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு இஷா தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்: (உங்களைத் தவிர மற்ற) மக்கள் அனைவரும் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை அத்தொழுகையில் நீங்கள் உள்ளீர்கள் (என்றே கருதப்படும்)” என்று கூறினார்கள். தொடர்ந்து ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நன்மையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை மக்கள் அந்த நன்மையிலேயே இருக்கிறார்கள். அறிவிப்பாளர் குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இ(ந்த இறுதி கூற்றான)து, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ளதாகும். அத்தியாயம் :
حدثنا عبد الله بن الصباح، قال حدثنا ابو علي الحنفي، حدثنا قرة بن خالد، قال انتظرنا الحسن وراث علينا حتى قربنا من وقت قيامه، فجاء فقال دعانا جيراننا هولاء. ثم قال قال انس نظرنا النبي صلى الله عليه وسلم ذات ليلة حتى كان شطر الليل يبلغه، فجاء فصلى لنا، ثم خطبنا فقال " الا ان الناس قد صلوا ثم رقدوا، وانكم لم تزالوا في صلاة ما انتظرتم الصلاة ". قال الحسن وان القوم لا يزالون بخير ما انتظروا الخير. قال قرة هو من حديث انس عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #600
- Book Index
- 75
Grades
- -
