ஹதீஸ்கள்
#599
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (நள்லா பின் உபைத்-ர-) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, “கடமையான தொழுகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு (எந்நேரத்தில்) தொழுவார்கள் என்று எங்களுக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ‘முதல் தொழுகை’ என்று அழைக்கும் நண்பகல் (லுஹ்ர்) தொழுகையைச் சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். -மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.- இஷா தொழுகையைப் பிற்படுத்து வதையே நபி (ஸல்) அவர்கள் விரும்பு வார்கள். இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பார்கள். எங்களில் ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறைத் தொழுகை (சுப்ஹு தொழுகை)யை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை ஓதுவார்கள்.31 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، قال حدثنا عوف، قال حدثنا ابو المنهال، قال انطلقت مع ابي الى ابي برزة الاسلمي فقال له ابي حدثنا كيف، كان رسول الله صلى الله عليه وسلم يصلي المكتوبة قال كان يصلي الهجير وهى التي تدعونها الاولى حين تدحض الشمس، ويصلي العصر، ثم يرجع احدنا الى اهله في اقصى المدينة والشمس حية، ونسيت ما قال في المغرب. قال وكان يستحب ان يوخر العشاء. قال وكان يكره النوم قبلها والحديث بعدها، وكان ينفتل من صلاة الغداة حين يعرف احدنا جليسه، ويقرا من الستين الى الماية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #599
- Book Index
- 74
Grades
- -
