ஹதீஸ்கள்
#595
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்றுகொண்டிருந் தோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உங்களை நான் விழிக்கச்செய்கிறேன்” என்று கூறினார்கள். எனவே, அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக்கொண்டி ருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில், நபி (ஸல்) அவர்கள் (முதன் முத-ல்) உறக்கத்தி-ருந்து விழித்தார்கள். உடனே, “பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். “இதுபோன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடும்போது உங்கள் உயிர்களைக் கைப்பற்றிக்கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்” என்று கூறிவிட்டு, “பிலால்! எழுந்து, பாங்கு சொல்- தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!” என்று கூறினார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்ட போது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள். அத்தியாயம் :
حدثنا عمران بن ميسرة، قال حدثنا محمد بن فضيل، قال حدثنا حصين، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال سرنا مع النبي صلى الله عليه وسلم ليلة فقال بعض القوم لو عرست بنا يا رسول الله. قال " اخاف ان تناموا عن الصلاة ". قال بلال انا اوقظكم. فاضطجعوا واسند بلال ظهره الى راحلته، فغلبته عيناه فنام، فاستيقظ النبي صلى الله عليه وسلم وقد طلع حاجب الشمس فقال " يا بلال اين ما قلت ". قال ما القيت على نومة مثلها قط. قال " ان الله قبض ارواحكم حين شاء، وردها عليكم حين شاء، يا بلال قم فاذن بالناس بالصلاة ". فتوضا فلما ارتفعت الشمس وابياضت قام فصلى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #595
- Book Index
- 70
Grades
- -
