ஹதீஸ்கள்
#590
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களை இறக்கச் செய்த (இறை)வன் மீதாணையாக! (அஸ்ர் தொழு கைக்குப் பின்னுள்ள அந்த) இரண்டு ரக்அத் தொழுகையை அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்தித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் -தாம் அஸ்ருக்குப் பின்னர் தொழும் அந்த இரண்டு ரக்அத்களை- அமர்ந்து கொண்டே தொழுவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும் தொழுவார்கள்; ஆனால், பள்ளிவாச-ல் அதைத் தொழமாட்டார்கள். தம் சமுதாயத் தாருக்குச் சிரமம் ஏற்படுத்துவதை அஞ்சி யதே இதற்குக் காரணம். தம் சமுதாயத் தாருக்கு எளிதானதையே அவர்கள் விரும்புவார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا عبد الواحد بن ايمن، قال حدثني ابي انه، سمع عايشة، قالت والذي ذهب به ما تركهما حتى لقي الله، وما لقي الله تعالى حتى ثقل عن الصلاة، وكان يصلي كثيرا من صلاته قاعدا تعني الركعتين بعد العصر وكان النبي صلى الله عليه وسلم يصليهما، ولا يصليهما في المسجد مخافة ان يثقل على امته، وكان يحب ما يخفف عنهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #590
- Book Index
- 65
Grades
- -
