ஹதீஸ்கள்
#584
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு வியாபார முறைகளையும், ஆடை அணியும் இரண்டு முறைகளை யும், இரண்டு நேரங்களில் தொழுவதையும் தடை செய்தார்கள்; ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும்வரையிலும், அஸ்ர் தொழு கைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) மறையும்வரையிலும் தொழ வேண்டாமெனத் தடை செய்தார்கள். ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடு வதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டு வைத்துக்கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். முனாபதா, முலாமஸா எனும் இரண்டு வியாபார முறைகளையும் தடை செய்தார்கள்.26 அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، عن ابي اسامة، عن عبيد الله، عن خبيب بن عبد الرحمن، عن حفص بن عاصم، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن بيعتين وعن لبستين وعن صلاتين نهى عن الصلاة بعد الفجر حتى تطلع الشمس، وبعد العصر حتى تغرب الشمس، وعن اشتمال الصماء وعن الاحتباء في ثوب واحد يفضي بفرجه الى السماء، وعن المنابذة والملامسة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #584
- Book Index
- 59
Grades
- -
