ஹதீஸ்கள்
#569
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாவை தாமதப்படுத்தி னார்கள். இறுதியில், “பெண்களும் சிறுவர்களும் (தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து) உறங்கிவிட்டனர். தொழுவிக்க வாருங்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அழைத்தார்கள். பிறகு அவர்கள் வந்து, “உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறு யாரும் இத்தொழு கையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி ருக்கவில்லை” என்று கூறினார்கள். அன்றைய தினத்தில் மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெறவில்லை. செம்மேகம் மறைந்தது முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும்வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் மக்கள் இஷா தொழுபவர்களாக இருந்தனர். அத்தியாயம் :
حدثنا ايوب بن سليمان، قال حدثني ابو بكر، عن سليمان، قال صالح بن كيسان اخبرني ابن شهاب، عن عروة، ان عايشة، قالت اعتم رسول الله صلى الله عليه وسلم بالعشاء حتى ناداه عمر الصلاة، نام النساء والصبيان. فخرج فقال " ما ينتظرها احد من اهل الارض غيركم ". قال ولا يصلى يوميذ الا بالمدينة، وكانوا يصلون فيما بين ان يغيب الشفق الى ثلث الليل الاول
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #569
- Book Index
- 46
Grades
- -
