ஹதீஸ்கள்
#566
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஸ்லாம் (மதீனாவுக்கு வெளியே) பரவுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (நாள்) இரவு இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள்,“(தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” எனத் தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத் தி-ருந்து தொழுகை நடத்த) வெளியே வரவில்லை. பிறகு வெளியே வந்து பள்ளிவாசலில் உள்ளவர்களை நோக்கி, “(தற்போது) பூமி யிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்க வில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، قال حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة، ان عايشة، اخبرته قالت، اعتم رسول الله صلى الله عليه وسلم ليلة بالعشاء، وذلك قبل ان يفشو الاسلام، فلم يخرج حتى قال عمر نام النساء والصبيان. فخرج فقال لاهل المسجد " ما ينتظرها احد من اهل الارض غيركم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #566
- Book Index
- 43
Grades
- -
