ஹதீஸ்கள்
#550
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். அப்போது சூரியன் உயர்ந்தே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் நிகழாமல்) தெளிவாகவே இருக்கும். (நஜ்த் திசையி-ருந்த) மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளுக்குச் செல்பவர் அங்கே இருப்பவர்களிடம் சென்றடையும்போது, சூரியன் உயர்ந்தே இருக்கும். அந்த மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளில் சில மதீனாவி-ருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் அமைந்திருந்தன. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال حدثني انس بن مالك، قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي العصر والشمس مرتفعة حية، فيذهب الذاهب الى العوالي فياتيهم والشمس مرتفعة، وبعض العوالي من المدينة على اربعة اميال او نحوه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #550
- Book Index
- 27
Grades
- -
